மகிழ்திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில், லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், கதாநாயகியாக த்ரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலே நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் நடிகர் அஜித்தின் வீடியோ சமூக வலைதளதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, ‘விடாமுயற்சி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, அஜித் சென்னை திரும்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.