தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரும், தமிழக அரசியலின் மிகமுக்கிய ஆளுமையுமானவர் விஜயகாந்த். இவருடன், நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்து, நல்ல பேரை பெற்றுள்ளனர்.
ஆனால், நடிகர் அஜித், தனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தும், அதனை மறுத்துள்ளார். அதாவது, பெரியண்ணா என்ற திரைப்படத்தை, விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார்.
இந்த படத்தில், சூர்யாவுக்கு பதில், நடிகர் அஜித்தை தான், முதலில் இயக்குநர் தேர்வு செய்திருந்தார். ஆனால், அந்த சமயத்தில் முதுகு வலி பிரச்சனை தீவிரமாக இருந்ததால், அஜித் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.