குட் பேட் அக்லியில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ள தேவி ஸ்ரீ பிரசாத், புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டுள்ளார்.

அப்போது, அவரிடம் படம் தொடர்பான சுவாரசிய தகவல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இப்படத்தில் இடம்பெற்றுள்ள மாஸான பாடல் ஒன்றிற்கு, அஜித் சூப்பராக நடனம் ஆடியிருக்கிறார் என்று கூறியுள்ளார். இவரது இந்த புதிய அப்டேட், ரசிகர்களை உற்சாகம் ஆக்கியுள்ளது.

RELATED ARTICLES

Recent News