தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். நடிப்பது மட்டுமின்றி, பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ட்ரோன்கள் இயக்குதல் என பல்வேறு விஷயங்களில் பங்கேற்று வருகிறார்.
இதற்கிடையே, பைக்கிலேயே, இந்தியா முழுவதும் சுற்றி வரும் முயற்சியை, அஜித் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு அடுத்ததாக, சிறிய ப்ரேக் எடுத்துவிட்டு, உலகை சுற்றும் முயற்சியை, அஜித் தொடங்க உள்ளாராம்.