அஜித்தின் அடுத்த இயக்குநர் இவரா? ரசிகர்கள் குஷி! பொதுமக்கள் பகீர்?

அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் குட் பேட் அக்லி. கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இருப்பினும், அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்துவிட்டதால், வசூலில் பாதிப்பு ஏற்படவில்லை. இவ்வாறு இருக்க, அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குநர் குறித்து, தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, அஜித்தின் அடுத்த படத்தையும், இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் தான் இயக்க உள்ளார். மேலும், குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தான், இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாம். இது, ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக இருந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் தரும் சினிமா விரும்பிகளுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News