3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படங்களுக்கு பிறகு, லால் சலாம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தும், இப்படம் சராசரி லாபத்தைக் கூட பெறாமல் தோல்வி அடைந்தது. இவ்வாறு இருக்க, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்து இன்னொரு திரைப்படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்தில் நடிகர் சித்தார்த் தான் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், ஐஸ்வர்யா கூறிய கதை, அவருக்கு பிடித்துவிட்டதாகவும், தகவல் பரவி வருகிறது.