பல காட்சிகளை தொலைத்துவிட்டோம்…லால் சலாம் தோல்விக்கு இதுதான் காரணம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. விக்ராந்த், விஷ்ணு விஷால் இப்படத்தில் நடித்திருந்தனர். இதில் ரஜினிகாந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆனாலும் இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

இந்நிலையில் லால் சலாம் படத்தின் தோல்வி குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். படத்தில் ரஜினிகாந்த் இருந்ததும், நாங்கள் அவர் கதாபாத்திரம் மீது கவனம் செலுத்தியதால், கதை அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது.

21 நாள் படப்பிடிப்பு நடத்திய ஃபுட்டேஜ் காணாமப் போயிடுச்சு. ஆயிரக்கணக்கான ஜூனியர் நடிகர்களை வைத்து 10 கேமராக்கள் மூலம் ஒரு கிரிக்கெட் போட்டியை லைவ்வாக ஷூட் பண்ணினோம். அதெல்லாமும் மிஸ்ஸாகிடுச்சு. அது மட்டும் மிஸ் ஆகலைன்னா நாங்க சொல்ல வந்த விஷயத்தை இன்னும் தெளிவா சொல்லியிருப்போம் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News