என்றும் இளமை மாறாத ஒருசில நடிகர்களில் ஒருவர் இளைய திலகம் பிரபு. இன்றும் சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் இவருக்கு, இன்றும் பல பெண் ரசிகைகள் இருந்துக் கொண்டு தான் உள்ளனர்.
இதனை எடுத்துக்காட்டும் விதமாக, பிரபல நடிகை ஐஸ்வர்யா, பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தனக்கு பிரபுவை ரொம்ப பிடிக்கும் என்றும், அவரை என்னுடைய 16 வயதில் இருந்தே காதலித்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், பிரபுவின் வீட்டின் அருகிலேயே வந்துவிட்டு, நான் சின்ன வீடா இருந்துக் கொள்கிறேன் என்று, அவரது மனைவியிடம் கிண்டலாக பேசியதாகவும், ஐஸ்வர்யா பேட்டியளித்துள்ளார்.