தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவரும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யாவும், காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
இருவரும் இணைந்து இரண்டு ஆண் குழந்தைகள் பெற்று, 20 வருடங்கள் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, பிரிந்து வாழ இருப்பதாக அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு, திரைத்துறையினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவர்கள் இரண்டு பேரும் இணைய வாய்ப்பு இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஏதேனும் பதிவை வெளியிட்டால், அதற்கு லைக்ஸ் போடுவதை, தனுஷ் வழக்கமாக வைத்துள்ளார். இதனை அறிந்த சினிமா வட்டாரத்தை சேர்ந்த சிலர், இருவரும் இணைய வாய்ப்பு இருப்பதாக கிசுகிசுத்து வருகின்றனர்.