சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில், கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில், கட்சி நிர்வாகம் குறித்தும், 2026 சட்டமன்ற தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.