உடைந்தது அதிமுக – பாஜக கூட்டணி…முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை; கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன் என அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிஞர் அண்ணா குறித்து பேசியதால் அதிமுக- பாஜக இடையே மோதல் நீடித்து வந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன். ஜெயலலிதாவை விமர்சித்து மன்னிப்பு கேட்ட நிலையில் அண்ணாமலை, அண்ணாவை விமர்சித்து கொண்டிருக்கிறார் என்றார்.

தற்போதைக்கு அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இதைத்தான் இப்போது சொல்ல முடியும். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லாமல் போனால் எங்களுக்கு இழப்பு இல்லை. அவர்களுக்குதான் இழப்பு. பாஜக என்பது அதிமுகவுக்கு வேஸ்ட் லக்கேஜ். அண்ணாமலைக்கு திமிர் பிடித்துவிட்டது. தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு தகுதியானவர் அல்ல”. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News