சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்றைய தினம் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வேளாண்மை துறை இணை இயக்குனர் சிங்காரம் பங்கேற்று விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் கால்நடை துறை அலுவலர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர். குறைதீர் கூட்டம் தொடங்கியதுமே விவசாயிகள் தங்களுக்கு உள்ள குறைகளை அதிகாரியிடம் எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அதிகாரிகள் விவசாயிகளை குறைகளை செவி கொடுத்து கேட்காமல் Whatsapp மற்றும் youtube ஆகியவற்றை செல்போனில் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். மேலும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த காட்சியும் அரங்கேறியது.
விவசாயிகள் தங்களது குறைகளை சொல்லிக் கொண்டிருந்தபோது அரசு அதிகாரிகள் இதுபோன்று நடந்த கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.