தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் இவர் நடித்து வெளியான வீரசிம்ஹரெட்டி மற்றும் வால்டர் வீரையா ஆகிய இரு தெலுங்கு திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் சலார் படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், ஹாலிவுட்டிலும் நடித்துவருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்த இவர், தனக்கு திரைக்கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளது என்றும் , விரைவில் ஒரு புது பயணத்தை எதிர்பார்த்து இருப்பதாகவும் கூறினார்.
மேலும் நேரம் கிடைத்தால் ஒரு திரைப்படத்தின் முழு ஸ்கிரிப்பட்டை உருவாக்கவுள்ளதாக தெரிவித்தார். ஆகவே ஸ்ருதிஹாசன் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்தின் மகள்கள் இயக்குனராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.