மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற அர்ச்சனை சேவையில் குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டார். அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
அதன்பின் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய சுரேஷ் கோபி 12 ஆண்டுகளுக்குப் பின் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சாமி தரிசனத்திற்கு பின் மனது மிகவும் அமைதியாக இருப்பதை உணர முடிகிறது.
தேச அளவில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். பெரும் மழையால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளது. கேரள மாநிலத்தில் சுற்றுலாத்துறை மீண்டும் வேகம் எடுக்க துவங்கியுள்ளது என்று பேட்டியளித்துள்ளார்.