விசில், சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை காயத்ரி ரகுராம்.
படங்களில் நடிப்பது மட்டுமின்றி, நடன இயக்குநராகவும் பணியாற்றியுள்ள இவர், பாஜக கட்சியில் பதவி வகித்து வந்தார். சமீபத்தில், அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், தற்போது அதிமுக கட்சியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே , காயத்ரி ரகுராம்-க்கு, மகளிர் அணி துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.