டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் ஜாமீனில் விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
புதிய முதல்வராக அதிஷி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதிஷி நேற்று முன்தினம் துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார்.
இந்த நிலையில், முதல்வர் பதவியேற்பு விழாவை வரும் செப்.21-ம் தேதி நடத்துவதற்கு ஜனாதிபதி முர்வுக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளார். அதே போல் கெஜ்ரிவாலின் ராஜினாமா கடிதமும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.