ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் உருவான திரைப்படம் ஆதிபுருஷ். தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நேரடியாகவும், தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், வெளியிடப்பட்டது.
ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், தற்போது படுஜேராக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தை, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களிலும், வடமாநிலங்களிலும், பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் வசூல் தொடர்பான தகவல், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டு நாட்களில் மட்டும் 240 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளது. இந்த தகவலை அறிந்த படக்குழுவினர், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.