உலக கோடிஸ்வரர் பட்டியலில் ஒருவர் தொழிலதிபர் அதானி. இந்தியாவை சேர்ந்த இவர், அதானி குழுமம் துறைமுகங்கள்,சுரங்கம்,எரிவாயு, தளவாடங்கள், விண்வெளி மற்றும் விமான நிலையங்கள் போன்ற பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர், ஃபோர்ப்ஸ் உலக பணக்கார பட்டியலில் மீண்டும் 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஆதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-வது இடத்தை பிடித்த அதானி, பின்னர் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இச்சூழலில் நேற்று ஒரே நாளில் அவரது பங்குகளின் மதிப்பு ரூ.2,600 கோடி உயர்ந்து, மொத்தம் ரூ.10.92 கோடியாக உயர்ந்தது. எனவே உலக பணக்காரபட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். 3-வது இடத்தில் இருந்த ஜெஃப் பெல்ஸோஸ் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.