கௌதம் மேனன் இயக்கத்தில், கமல் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு.
சைக்கோ கொலைகாரர்களை பிடிக்கும், காவல்துறை அதிகாரியை பற்றிய இந்த திரைப்படம், பெரும் வெற்றியை பெற்றது.
ஆக்ஷன் ஒரு பக்கம் அனல் பறக்கும் வகையில் இருந்தாலும், இன்னொரு பக்கம், காதல் காட்சிகளும் ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, பார்த்த முதல் நாளே பாடல், இன்றளவும் ரசிகர்கள் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்த கமலினியின் புகைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, இவர் உடல் எடை அதிகரித்து, ஆள் அடையாளமே தெரியாத அளவில் மாறியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம், இணையத்திலும் வைரலாக பரவி வருகிறது.