தமிழ் சினிமாவின் ஜெண்டில் மேன் என்று அறியப்படுபவர் நடிகர் அஜித்குமார். தன்னுடன் பணியாற்றும் நடிகைகளுடன் மிகவும் கண்ணியமாக நடந்துக் கொள்ளும் இவர், எந்தவொரு கிசுகிசுவிலும் சிக்கியது கிடையாது.
ஆனால், இவரது திரைப்பயணம் தொடங்கிய 90-களின் காலக்கட்டத்தில், இவர் ஒரே ஒரு கிசுகிசுவில் சிக்கியிருந்தார்.
அது என்னவென்றால், இவரும், நடிகை ஹீராவும் காதலித்து வருவதாகவும், அந்த காதல் பின்னாளில் பிரேக்-அப்பில் முடிந்துவிட்டது என்றும், அந்த சமயத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
இவ்வாறு அஜித்தின் முன்னாள் காதலி என்று கிசுகிசுக்கப்பட்ட ஹீராவின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் அடையாளம் தெரியாத அளவிற்கு அவர் மாறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.