ப்ளாக் ஷீப் என்ற Youtube சேனலில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸில், பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரிகிடா சகா.
இதன் பிறகு, சினிமாவில் அறிமுகமான இவர், மாஸ்டர், இரவின் நிழல், கருடன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, கோழிப்பண்ணை செல்லத்துரை என்ற படத்தில், கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள இவர், அப்படத்தின் புரமோஷனுக்கு பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
அவ்வாறு பேட்டி அளிக்கும்போது, “நான் மிகவும் சின்ன பொண்ணு தான். நான் நடித்த கதாபாத்திரங்கள் வயது முதிர்ந்தவராக இருப்பதால், வயது அதிகம் உள்ள பெண்ணாக தோன்றலாம்” என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
பிரிகிடா சகாவுக்கு, தற்போது 24 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.