நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய மறைவு பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அவரது உடலுக்கு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், கட்சி தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சினிமாவில் சிறந்த நடிகராகவும், அரசியலில் நல்ல தலைவராகவும், மக்களுக்கு நல்ல மனிதனாகவும் வாழ்ந்து மறைந்தவர் விஜயகாந்த். இதுவரை சினிமாவில் அவர் மொத்தம் 180 படங்கள் நடித்துள்ளார். தமிழை தாண்டி எந்த மொழியிலும் நடிக்ககூடாது என விடாப்பிடியாய் இருந்தவர் தான் நடிகர் விஜயகாந்த்.
விஜயகாந்த் கடைசியாக ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் தனது மகன் சண்முகபாண்டியனுடன் நடித்தார். இப்படத்தை இயக்குனர் அருண் பொன்னம்பலம் இயக்கினார். ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை காரணமாக படம் கைவிடப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் சீன் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடைசியாக நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட தமிழன் என்று சொல் படப்பிடிப்பு தளம் pic.twitter.com/G5KkXHkZSS
— Rajini (@rajini198080) December 28, 2023