தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் பல்வேறு படங்களில் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், சில நேரங்களில், சில சூப்பர் ஹிட் படங்களின் வாய்ப்பை, கால்ஷீட் பிரச்சனைகளால், தவறவிட்டிருக்கிறார்.
அந்த வகையில், விஜய் மிஸ் பண்ணிய ஒரு திரைப்படம், நடிகர் தனுஷ் நடித்து, மிகப்பெரிய ஹிட்டானது. அதாவது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் தான் அனேகன்.
இப்படத்தின் கதை, முதன்முதலில், நடிகர் விஜய்-க்கு தான் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த சமயத்தில் கால்ஷீட் கிடைக்காததால், விஜய் நடிக்க முடியாமல் போனதாம்.