தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினோஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் லப்பர் பந்து.
கடந்த 20-ஆம் தேதி ரிலீஸ் ஆகியிருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, அட்டகத்தி தினேஷின் கதாபாத்திரம், பலராலும் பாராட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் என்ற தகவல் கசிந்துள்ளது. அதன்படி, இந்த கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான் முதலில் நடிக்க இருந்தாராம்.
ஆனால், பட்ஜெட்டை காட்டிலும் அதிக சம்பளம் கேட்டதால், சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, அந்த படத்தில் இருந்து எஸ்.ஜே.சூர்யாவே வெளியேறிவிட்டாராம்.