தளபதியாக மாற சூப்பர் ஸ்கெட்ச் போடும் எஸ்.கே! இன்னொரு விஜய் பட இயக்குநருடன் கூட்டணி!

தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை, நடிகர் விஜய் சமீபத்தில் துவக்கினார். தி கோட், தளபதி 69 ஆகிய இரண்டு படங்களை முடித்துவிட்டு, சினிமாவில் இருந்து விலக இருப்பதாகவும் அவர் அறிவித்துவிட்டார்.

இதனால், அடுத்த தளபதி யார் என்று பலரும் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த போட்டியில் நடிகர் சிவகார்த்திகேயனும், இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது, விஜய்-க்கு பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், எஸ்.கே தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்தை முடித்துவிட்டு, விஜயின் தி கோட் படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபுவின் இயக்கத்திலும் அவர் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

இதனை வைத்து பார்க்கும்போது, தளபதி ஆக வேண்டும் என்ற ஆசை, சிவகார்த்திகேயனுக்கு வந்துவிட்டது என்று தெரிகிறது.

RELATED ARTICLES

Recent News