ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில், கடந்த 1996-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் இந்தியன். ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக உருவாக்கப்பட்டிருந்த இப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் என்ற தகவல், தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி, நடிகர் ரஜினி தான், இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தாராம். ஆனால், கால் ஷீட் பிரச்சனையால் ரஜினியால், அப்படத்தில் நடிக்க முடியவில்லை. அதன்பிறகு, இப்படத்தில், நடிகர் கமல் நடித்து, அது மிகப்பெரிய வெற்றி பெற்றது.