நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவனையில் நேற்று (செப்.30) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனையில், அவருக்கு வயிற்றுப் பகுதி ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிவிகிறது. இதையடுத்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்துள்ள ‘வேட்டையன்’ படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.