தலையில் காயம்.. குளியலறையில் சடலமாக கிடந்த பிரபல நடிகர் பிரதீப் விஜயன்..

தெகிடி, வட்டம், டெடி, மேயாத மான், லிஃப்ட் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வந்தவர் பிரதீப் விஜயன். சென்னையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த இவருக்கு, கடந்த 2 நாட்களாக நண்பர்கள் செல்போனில் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆனால், அந்த செல்போன் அழைப்புகளை அவர் ஏற்காததால், காவல்துறையில் நண்பர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு, உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, குளியலறையில், தலையில் காயங்களுடன், அவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த அவர்கள், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

RELATED ARTICLES

Recent News