‘எனது திருமண வாழ்க்கை முடிந்தது’ – விவாகரத்தை உறுதி செய்த ஜெயம் ரவி!

சினிமாவில் மிகவும் பிரபல நடிகராக வளம் வருபவர் நாயகன் ஜெயம் ரவி. அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தாஸ், எம்.குமரன், தீபாவளி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, போகன், கோமாளி, பொன்னியின் செல்வன் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது மனைவி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த ஜெயம் ரவி, தற்போது தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிந்து உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.

நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன், நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி” என ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News