சமூக வலைத்தளங்களின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பிஜிலி ரமேஷ். இவர் 2019-ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடித்த ‘நட்பே துணை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானார்.
சமீபத்தில் உடல் நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஒருசிலர் இவருக்கு பண உதவியும் அளித்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார் பிஜிலி ரமேஷ். அவருக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.