பாலிவுட் சினிமாவில் புரொடக்ஷன் மேனேஜராக பணியாற்றி வருபவர் அனுசுயா சென்குப்தா. கொல்கத்தாவை சேர்ந்த இவர், மசாபா மசாபா நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சி, சத்யஜித் ரே என்ற ஆந்தலாஜி ஆகிய படைப்புகளில் நடிகையாக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் தி ஷேம்லெஸ். ஒரு பெண் பாலியல் தொழிலாளிக்கும், இன்னொரு பெண் பாலியல் தொழிலாளிக்கும் இடையே உள்ள காதலை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படம், பலராலும் பாராட்டப்பட்டிருந்தது.
குறிப்பாக, இந்த திரைப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்த அனுசுயா, பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.
இந்நிலையில், இவருக்கு, இந்த படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான கேன்ஸ் விருது, வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், நடிப்பு பிரிவில், முதன்முறையாக கேன்ஸ் வருதை விருது பெற்ற இந்தியர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
இந்த விருதை பெற வரும்போது பேசிய அனுசுயா சென்குப்தா, “Queer பாலினத்தை சேர்ந்தவர்களுக்கு, இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்” என்று கூறினார்.