பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படுபவர் நடிகர் ஷாருக்கான். சமீபத்தில் இவர் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றிருந்தார். அப்போது படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் ஷாருக்கானின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து மருத்துவமனையில் அவருக்கு மூக்கு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்தியா திரும்பியுள்ள ஷாருக்கான் காயங்கள் சரியான பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கான் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.