சிவகாசி அருகே மேல ஒட்டம் பட்டியில் கேவிகே கந்தசாமி என்பவருக்கு சொந்தமான திருமுருகன் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை மத்திய வெடிப்பொருள் கட்டுபாட்டுத்துறை அனுமதி பெற்றது.
தீபாவளிக்கு இன்னும் 1 மாதம் உள்ள நிலையில் தீபாவளிக்கு பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் தொழிலாளர்கள் பணிக்கு செல்லும் போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டன. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன சம்பவ இடத்திற்கு சாத்துார் மற்றும் சிவகாசியிலிருந்து தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்கு விரைந்து உள்ளனர்.
தொடர்ந்து பட்டாசு ஆலையில் வெடி வெடித்து கொண்டு இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.