குஜராத்தில் 200-க்கு 212 மதிப்பெண் எடுத்த மாணவி!

குஜராத்தில் மாணவி ஒருவருக்கு கணக்குப் பாடத்தில் 200 மதிப்பெண்களுக்கு 212 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள சம்பவம் இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

குஜராத்தை சேர்ந்த வன்ஷீபன் மணீஷ்பாய் என்ற மாணவி, தனியார் பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு இறுதித் தீர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் கணக்குப் பாடத்தில் 200 மதிப்பெண்களுக்கு 212 மதிப்பெண்கள் எடுத்திருப்பதாகவும், குஜராத்தி மொழிப்பாடத்தில் 200 மதிப்பெண்களுக்கு 211 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக அச்சிடப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பெற்றோர்கள் பள்ளியைத் தொடர்பு விசாரித்துள்ளனர்.

அதற்கு கணக்கீட்டில் சிறிய தவறு ஏற்பட்டுள்ளதால் இந்த குழப்பம் என்று பள்ளி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திருத்தம் செய்யப்பட்ட புதிய மதிப்பெண் பட்டியல் அந்த சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே குளறுபடியுடன் கூடிய மதிப்பெண் பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெடிசன்கள் இது குஜராத் மாடல் பட்டியல் என்று கலாந்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News