சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென தீப்பொறி பறந்ததால் பரபரப்பு

சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென தீப்பொறி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயிலில் பயணித்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் புறப்பட்ட மெட்ரோ ரயிலில் சென்னை உயர் நீதிமன்ற நிறுத்தத்தில் திடீரென தீப்பொறி கிளம்பியது. இதையடுத்து ரயிலில் இருந்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள் சுமார் அரை மணி நேரத்துக்குப் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையிலான நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News