அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வெள்ளாற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் விதமாக இரவு நேரங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நள்ளிரவு தளவாய் காவல்நிலையத்தில் பணிபுரியும் தமிழ்ச்செல்வன் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக சென்ற டாடா ஏசி வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் காவலர் மீது மோதி சென்று விட்டது.
இதில் கைகளில் எலும்பு முறிந்த நிலையில் தமிழ்ச்செல்வன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதுகுறித்து தளவாய் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, அடையாளம் தெரியாத நபர் இயக்கிய வாகனம் மணல் திருட்டுக்கு பயன்படுத்தியதா அல்லது மதுபான பாட்டில்கள் கடத்தப்பட்தா வேறு ஏதேனும் போதைப் பொருட்கள் கடத்துவதற்கு பயன்படுத்தப்படும் வண்டியா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பொதுமக்களிலேயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.