“இயேசுவே எனக்கு ட்ரீட் வேணும்” – வானத்தில் இருந்து வந்த மதுபாட்டில்! வைரல் வீடியோ!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ஆம் தேதி, கிறிஸ்துமஸ் பண்டிகையைாக கொண்டாடப்படுகிறது. மதபேதமில்லாமல் அனைவரும் கொண்டாடும் பண்டிகையாக உள்ள கிறிஸ்துமஸ், உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் கோலாகலமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் பேசுவது பின்வருமாறு:-

“என்னுடைய பிறந்தநாளுக்கு நான் என் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்தேன். என்னுடைய நண்பர்களும், அவர்களுடைய பிறந்தநாளுக்கு எனக்கு ட்ரீட் கொடுத்தார்கள். இன்று இயோசு கிறிஸ்துவின் பிறந்தநாள்.

எனவே, இயேசுவே எனக்கு ட்ரீட் கொடுங்கள்.. ஒரு சின்ன பாட்டிலை ( மது ) எனக்கு கொடுங்கள்.. நீங்கள் பாதி குடித்த பாட்டிலையாவது எனக்கு கொடுங்கள்” என்று கேட்கிறார்.

இதையடுத்து, மேலே இருந்து சரக்கு பாட்டில் விழுகிறது. இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ காமெடியாக உள்ளது என்று ஒரு சிலரும், இது மதநம்பிக்கையை புண்படுத்தும் வகையில் உள்ளது என்று வேறு சிலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News