மருத்துவமனைக்குள் நுழைந்த சிறுத்தை – அதிர்ச்சி அடைந்த நோயாளிகள்..

மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பார் மாவட்டம் ஷஹாதா பகுதியில், ஆதித்யா மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையின் உள்ளே, சிறுத்தை ஒன்று வந்துள்ளது. இதனை கண்ட மருத்துவமனை ஊழியர்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், சிறுத்தையை பிடித்தனர். இதையடுத்து, அந்த சிறுத்தை அங்கிருந்து, அப்புறப்படுத்தப்பட்டது.

சிறுத்தை மருத்துவமனைக்குள் வந்ததை அறிந்த நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், மருத்துவமனையில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

RELATED ARTICLES

Recent News