சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுகவின் முப்பெரும் விழா சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையேற்றுள்ளார்.
விழா தொடங்கிய நிலையில், ஸ்டாலினுக்கு அருகில் உள்ள இருக்கையில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியை அமர வைத்துள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக கருணாநிதி பேசியது திமுக தொண்டர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது.