சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் பாண்டித்துரை என்பவருக்கு சொந்தமான தங்கநகை அடகுக்கடையில் ரூ 1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு அடகுகடை பின்புரம் இருக்கும் சுவரில் ஒரு ஆள் செல்லும் அளவிற்க்கு துளையிட்டு மர்ம நபர்கள் அடகுக்கடைக்குள் புகுந்து, அங்கிருந்த சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நாகைகளை எடுத்துக்கொண்டு ஒடியுள்ளனர்.
இரண்டு நாள்களாக காவலாளியும் விடுமுறையில் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி சி.சி.டி.வி கேமராவும் கடந்த 6 மாதமாக செயல்பாட்டில் இல்லை. இதனை அறிந்து கொண்ட மர்ம ஆசாமிகள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.
சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் ஆய்வு மேற்கொண்டு கடை உரிமையாளர் பாண்டித்துறையிடம் விசாரித்தனர்.
போலிஸ் எஸ்.பி.உத்தரவின் பேரில் 5 சிறப்பு குழு அமைக்கப்பட்டு குற்றவாளி யார் என தேட தொடங்கி யுள்ளனர். தகவல் அறிந்த தங்க நாகை அடகு வைத்து பணம் வாங்கிய மக்கள் பெரும் அதிர்ச்சியடைத்துள்ளனர்.