மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் ரசாயனத் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு, வானில் கரும்புகை எழுந்து, அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தீ வேகமாகப் பரவி வருவதால் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இது வரை எந்த உயிர்ச் சேதமும் இல்லை என கூறப்பட்டுள்ளது. ரசாயனத் தொழிற்சாலையின் தீ விபத்தினால் ஏற்பட்ட கரும்புகையால், அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.