உத்தர பிரதேசத்தில் படாவன் நகரில் நீதிபதிகளுக்கான காலனியின் முதல் தளத்தில் வசித்து வந்தவர் ஜோத்சனா ராய் (வயது 27). படாவன் கோர்ட்டில் இளநிலை நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார். இன்று பணிக்கு வராததால் சக நீதிபதிகள் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர்.
இதற்கு பதில் வராத நிலையில் பெண் நீதிபதியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, அவருடைய வீட்டின் படுக்கையறை உள்புறம் பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அந்த பெண் நீதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும் அவருடைய அறையில் இருந்து சில ஆவணங்களும் மற்றும் தற்கொலை குறிப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.