கேரள மாநிலத்தில் இருந்து ஏடிஎம் மிஷினை கொள்ளை அடித்த வடமாநிலத்தைச் சேர்ந்த மர்ம கும்பல் கண்டனர் லாரியில் ஏற்றிக் கொண்டு கோவையிலிருந்து சேலம் நோக்கி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் கோவை பக்கம் இருந்து சேலம் நோக்கி வந்த கண்டனர் லாரியை பின் தொடர்ந்து துரத்தி வந்தனர்.
இதையடுத்து காலை 9:25 மணிக்கு சங்ககிரி அருகே பச்சாம்பாளையம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சர்வீஸ் சாலையில் திடீரென கண்டனர் லாரி திருப்பி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கண்டனர் லாரி சாலையில் சென்ற வாகனங்களின் மோதி நிக்காமல் சென்றுள்ளது. இந்த தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட மாவட்டம் திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் இமயவர்மன் மற்றும் சங்ககிரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான போலீசார் சங்ககிரி அருகே சன்னியாசிபட்டி பவர் ஆபீஸ் அருகே கண்டனர் லாரியை சுற்றி வளைத்தனர்.
பின்னர் கண்டெய்னர் லாரியில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் இருக்கக்கூடும் என சந்தேம் எழுந்ததால் போலீஸ் பாதுகாப்புடன் வனப்பகுதிக்கு கொண்டு சென்று சோதனை செய்தனர். அந்த லாரிக்குள் கட்டுக்கட்டாக பணம் மற்றும் சொகுசு கார் இருந்தது.
கண்டெய்னரைத் திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த நபர்கள் போலீசாரைத் தாக்கினர். போலீசார் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைப் பிடித்தனர்.
இதற்கிடையே, நாமக்கல் போலீசாரின் அதிரடி என்கவுன்ட்டரில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். ஒருவனுக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மற்ற சிலரைக் கைது செய்து போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.