தனியார் மதுபான பாரில் நடனமாடிய கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்தனார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (வயது 22) என்பவர் ராமாபுரம் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து ராமாபுரத்திலேயே பிஜி ஹாஸ்டலில் தங்கி வந்துள்ளார்.
நேற்று இரவு பெண் தோழிகளுடன்( ஹரிதா, சண்முகப்பிரியா தேவகி) ராமாபுரத்தில் இருந்து புறப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபான பாருக்கு நண்பர்களுடன் சேர்ந்து நடனம் ஆடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு சுயநினைவின்றி இருந்தவரை 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்த போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.