விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1 மணி அளவில், முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரி வரை இயக்கப்படும் நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
இந்த இந்த பேருந்து, வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்புற படிக்கட்டு திடீரென உடைந்து ரோட்டில் விழுந்தது. அந்த சமயம் படிகட்டு மற்றும் பின் பகுதியில் பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.
இதையறிந்த ஓட்டுனர், பயணிகளை இறக்கி விட்டு திரும்ப வரும் போது, சாலையோரம் கிடந்த படிக்கட்டை எடுத்துக் கொண்டு பணிமனைக்குச் சென்றனர். இந்த சம்பவம் அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.