சென்னை துரைப்பாக்கம் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலை கோவிலம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார்க்கு சொந்தமான காவேரி மருத்துவமனைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இன்று காலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து சுமார் 7 மணியளவில் அருகில் உள்ள மேடவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெடிகுண்டு நிபுணர்களை வரவைத்து வெடிகுண்டு மிரட்டல் வந்த மருத்துவமனைக்கு சென்றனர்.
8-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிறுவனர்கள் மற்றும் 10 க்கும் மேற்பட்டோர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் உள்ள நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததும், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்வதும் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.