உத்தரபிரதேச மாநிலம் காஷிப்பூர் பகுதியை சேர்ந்தவர் சுனில் பாண்டே. பல்ராம்பூர் மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் இவர், தற்போது வாரணாசி பகுதியில் வசித்து வருகிறார்.
ஆனால், இவருக்கு இந்திரா நகர் பகுதியில் மற்றொரு வீடு உள்ளது. யாரும் அந்த வீட்டில் வசிக்காமல் இருக்கும் நிலையில், வீட்டு பயன்பாட்டிற்கான பொருட்கள் மட்டும் இருந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று, பூட்டிக் கிடந்த சுனில் வீட்டில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், சன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்துள்ளனர்.
அங்கு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், காவல்துறையிருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டில் உள்ளே நுழைந்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது தான், வீட்டிற்கு திருட வந்த நபர், போதையில் வீட்டிலேயே தூங்கியிருக்கிறார் என்று தெரியவந்தது.
இதையடுத்து, கபில் என்ற அந்த திருடனை கைது செய்த காவல்துறையினர், 379A பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்தனர். போதையில், திருட சென்ற வீட்டிலேயே இளைஞர் தூங்கிய சம்பவம், பெரும் நகைப்பபை ஏற்படுத்தியுள்ளது.