உத்தர பிரதேச மாநிலம் பலராம்பூரை சேர்ந்த ரித்தேஷ் என்ற 5 வயது சிறுவன் தனது தாத்தாவுடன் காட்டிற்குள் சென்றுள்ளார். புதர்களுக்குள் மறைந்திருந்த சிறுத்தைப்புலி ரித்தேஷை கவ்வி இழுத்துச் சென்றது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சிறுத்தைப்புலி வனப்பகுதிக்குள் சென்று மறைந்துவிட்டது.
இதையடுத்து சிதைந்த நிலையில் இருந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும்’ என மாவட்ட கலெக்டர் அரவிந்த் சிங் தெரிவித்தார்.