சென்னை ஜாஃபர்கான் பேட்டை காசி தியேட்டர் அருகே உள்ள கூவத்தில் இன்று காலை ஆண் சடலம் ஓன்று மிதப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே இது குறித்து குமரன் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் கூவம் ஓரம் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் சடலம் அருகே கிடந்த அரிவாள் ஒன்றை கைப்பற்றிய போலீசார் இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த சிறுவன் சென்னை எம்ஜிஆர் நகர் அன்னை சத்யா நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் சஞ்சய் என்பது தெரியவந்தது.
மேலும் கொலையுண்ட சஞ்சய் மீது எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், சிறுவன் சஞ்சயை கொலை செய்து கூவம் ஆற்றில் வீசியதும் விசாரணை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குமரன் நகர் போலீசார் சிறுவன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? சிறுவனை கொலை செய்து கூவம் ஆற்றில் வீசிய விட்டு தப்பிச் சென்ற நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.