மூதாட்டியிடம் 10 பவுன் செயினை பறித்துச் சென்ற 16 வயது சிறுவன்!

மூதாட்டியிடம் 10 பவுன் செயினை பறித்துச் சென்ற 16 வயது சிறுவனை சிசிடிவி காட்சிகளை வைத்து மூன்று மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பன்னிமடை அருகே ஆர்.ஆர்.அவென்யூ குடியிருப்புக்கு பார்வதி 64, சிவசங்கர் ஆகிய வயதான தம்பதியினர் புதிதாக குடிவந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களது வீட்டின் வேலைக்காக பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற 16வயது சிறுவனை வேலைக்கு வைத்துள்ளனர். சம்பவத்தன்று வீட்டின் வெளியில் யாருமில்லாத போது பார்வதி என்ற மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த பத்து பவுன் தாலி கொடியை பறித்துச் சென்றுள்ளார்.

இது குறித்து உடனடியாக தடாகம் காவல் நிலையத்திற்கு சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து தனிப்படை அமைத்து செயினை பறித்துச் சென்ற சிறுவனை மூன்று மணி நேரத்தில் கைது செய்து அவரிடம் இருந்த 10 பவுன் தாலி கொடியையும் கைப்பற்றியுள்ளனர்.

இதற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற பெயர் விலாசம் தெரியாத வெளி மாநில நபர்களை வேலைக்கு அமர்த்துவதை எவ்வளவு ஆபத்தானது என்பதை பற்றியும் அவ்வாறு வைக்கும் பட்சத்தில் அவர்களின் முறையான ஆவணங்களை பெற்று வைக்குமாறும் மேலும் தாங்கள் குடியிருக்கும் பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இது போன்ற சிசிடிவி காட்சிகளை சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News